இறந்தவரை அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் கிராமம் : சுடுகாடு வசதி இல்லாமல் காத்திருந்த அவலம்!!

Author: Udhayakumar Raman
21 October 2021, 4:56 pm
Quick Share

தருமபுரி: அரூர் அருகே சுடுகாடு வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த வீரப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கோபாலபட்டிபுதூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.கடந்த சில வருடங்களுக்கு மேலாக இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மயான வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.மேலும் இப்பகுதியில் உள்ள மக்களில் ஒரு சிலர் சொந்தமாக நிலங்கள் வைத்துள்ளதால் அவர்கள் விவசாய நிலங்களில் தங்களது உறவினர்களின் உடல்நிலை அடக்கம் செய்து வந்துள்ளனர். ஆனால் விவசாய நிலம் இல்லாத நபர்கள் அவர்களின் உடல்கள் அருகிலுள்ள ஈட்டியம்பட்டி கிராமத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அக்கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி பூவியம்மாள் நேற்று உயிரிழந்தார்.

அவரது உடலை அடக்கம் செய்ய ஈட்டியம்பட்டியில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர். ஆனால் அங்கு உடல் அடக்கம் செய்யக்கூடாது என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உடலை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் செய்தறியாமல் இறந்தவரின் உடலை வைத்து நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் அப்பகுதிகிராம மக்கள் அரூர் வட்டாட்சியர் மற்றும் அரூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் கோபாலபட்டி புதூர் பகுதிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தில் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர்

ஆனால் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் கடந்த 30 வருடங்களாக முத்தனுரைச்சார்ந்த துரைசாமி மற்றும் அவரது மனைவி போதும்மாள் ஆகியோர் விவசாயம் செய்து வந்துள்ளனர். மேலும் அந்த இடத்தில் உடலை அடக்கம் செய்ய கூடாது என வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அரசு அதிகாரிகள் சுமூக பேச்சுவார்த்தை பேரில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்தனர்.

Views: - 150

0

0