ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட கிராம மக்கள்

19 November 2020, 6:09 pm
Quick Share

மதுரை: மதுரை அருகே விவசாயியை தாக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயிரிழந்த விஜயநாதனின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க கோரியும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

மதுரை மாவட்டம் சிந்துபட்டி அருகே காண்டை கிராமத்தை சேர்ந்த முத்துவிஜயநாதன் என்ற விவசாயி கடந்த 14ஆம் தேதி வடக்கம்பட்டி நோக்கி சென்றபோது சாலையில் நடுவில் நின்றுகொண்டிருந்த இளைஞர்கள் சிலரை வாகன ஓட்டிகளுக்கு இடையூறு தராமல் ஓரமாக நிற்குமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்துவிஜயநாதனை தாக்கயதில் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில் முத்து விஜயநாதனை தாக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், உயிரிழந்த விஜயநாதனின் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்க கோரி, தொடர்ந்து சிந்துபட்டி பகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் ( முத்தரையர்) மீது தாக்குதல் நடைபெறுவதை தடுக்க கோரியும் இன்று கண்டு கிராம மக்கள் திடிரென மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனின் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கிராமத்தினரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த நிலையில் கலைந்துசென்றனர். மாவட்ட ஆட்சியரை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 0

0

0