தொடர் மழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42.50 அடியாக உயர்வு

Author: Udhayakumar Raman
2 October 2021, 7:30 pm
Quick Share

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42.50 அடியாக உயர்ந்துள்ளது

கோவை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சிறுவாணி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42.50 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த மாத தொடக்கத்தில் இருந்து சிறுவாணி அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு தொடர்ந்து காணப்படுகிறது. நீராதாரமாக காணப்படும் அருவிகளில் இருந்து நீர்வரத்து காணப்படுகிறது. இதன் முத்திக் குளம், பட்டியாறு பாம்பாறு, உள்ளிட்ட அருவிகளில் இருந்தும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் கடந்த மாதம் தொடக்கத்தில் 41 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது ஒரு மீட்டர் உயர்ந்து தொடர்ந்து 42 அடியாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42.50 அடியாக உயர்ந்து இருக்கிறது. அணையின் முழு கொள்ளளவு 50 அடி ஆகும். பாதுகாப்பு காரணங்களைக் கூறி சில ஆண்டுகளாகவே கேரள அரசு 45 அடி நீர் இருப்பு வைத்து வருகிறது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டுவது இல்லை.

Views: - 99

0

0