பிளாஸ்டிக் கடையில் இருந்த மூன்று லட்ச ரூபாய் பணத்தை திருடிய பெண்: சிசிடிவி காட்சியில் சிக்கிய அவலம்

17 April 2021, 10:32 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் பிளாஸ்டிக் கடையில் இருந்த மூன்று லட்ச ரூபாய் பணத்தை திருடி செல்லும் பெண்ணை சிசிடிவி காட்சிகளை கொண்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈரோடு மாணிக்கம் பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் இவர் மார்க்கெட் பகுதியில் உள்ள கொங்காலம்மன் கோயில் வீதியில் பிளாஸ்டிக் மற்றும் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரகாஷ் 3லட்ச ரூபாயை பையில் வைத்து கடையில் டேபிள் மேல் வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த பெண் கடையில் பொருட்கள் வாங்குவது போன்று நின்று கொண்டிருந்தார். அப்போது கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரகாஷ் எதிர்பாராத நேரத்தில் டேபில் மீது வைத்திருந்த பணப்பையை லாபகமாக திருடி பெண் அங்கிருந்து சென்று விட்டார்.

பின்பு கடையில் வைத்த பணப்பையை தேடியும் கிடைக்காததால் சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். இதில் பெண் ஒருவர் பணத்தை திருடி செல்வதை பார்த்து பின்பு திருட்டு குறித்து நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பணப்பையை திருடிய பெண் குறித்து சிசிடிவி காட்சிகள் கொண்டு நகர காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Views: - 23

0

0