கிராமத்தில் பெண்கள் மண்பானையில் பொங்கல் வைத்து உற்சாக கொண்டாட்டம்

15 January 2021, 4:12 pm
Quick Share

திருச்சி: சோமரசம்பேட்டை அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில் பெண்கள் மண்பானையில் பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடினர்.

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான, அறுவடைத் திருநாள் என்றும் அழைக்கப்படும் பொங்கல் விழாவை நேற்று தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து தமிழர்களும் சிறப்பாக, உற்சாகமா கொண்டாடினர். இரண்டாவது நாளான இன்று மாட்டுப்பொங்கல் விழாவை தமிழகம் முழுவதும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கொண்டாடி வருகின்றன்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அடுத்துள்ள மல்லியம்பத்து கிராமத்தில் பாரத இளைஞர் அணி மற்றும் மகேந்திரன் கபடி குழுவின் சார்பில் மாரியம்மன் கோவில் முன்பு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கிராமத்தில் மாட்டை குளிப்பாட்டி, திலகமிட்டு, பூக்கள் வைத்து பெண்கள் அங்குள்ள மாரியம்மன் கோவில் முன்பு 15க்கு மேற்பட்ட மண் பானைகளில் பொங்கல் வைத்து ஆண்கள், வாலிபர்கள் என பலர் பொங்கலிட்டு உற்சாகமாக கொண்டாடினர்.

Views: - 4

0

0