தென்னை மரம் ஏறும் தொழிலாளி தென்னை மரத்திலிருந்து விழுந்து பலி
7 August 2020, 10:14 pmஅரியலூர்; தென்னை மரம் ஏறும் தொழிலாளி தென்னை மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் திருமழபாடி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவர் தென்னை மரத்தில் ஏறி மரத்தை சுத்தம் செய்து தேங்காய்களை பறித்து கொடுக்கும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் புதுக்கோட்டை சாலையில் உள்ள சாந்தி சிவகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இருந்த தென்னை மரங்களை சுத்தம் செய்து காய்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 40 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய்களை பறிப்பதற்காக மரத்தில் ஏறும் போது தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி சிவகுமார் இது குறித்து அன்பழகனின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து திருமானூர் போலீசாருக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.