மதில் சுவர் மீது கட்டப்பட்டு இருந்த சாரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி : போலீசார் விசாரணை

Author: kavin kumar
30 January 2022, 2:58 pm
Quick Share

திருச்சி : ஸ்ரீரங்கம் மதில் சுவர் மீது கட்டப்பட்டு இருந்த சாரத்தில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த சோழபுரம் பகுதியைச் சோ்ந்த பாலு என்பவரது மகன் வாசுதேவன் (47). இவருக்கு கலைவாணி என்பவருடன் திருமணமாகி சிவனேஸ் ,சிவராஜ் , சினேகா மற்றும் சிவரஞ்சனி என இரண்டு மகள்கள் உள்ளனர். கட்டிட தொழிலாளியான வாசுதேவன் கடந்த 6 மாதமாக திருச்சி ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் உள்ள கோவில் மதில் சுவரில் கட்டிட பணியாளராக வேலை செய்து வந்தார். கட்டப்படும் கட்டடத்தில் இவா் நின்று வேலை செய்த சாரம் சரிந்ததில் கீழே விழுந்த வாசுதேவன் தலையில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் இறந்து விட்டதாகத் தெரிவித்தாா். ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Views: - 336

0

0