கால்வாயில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு: பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உடல் மீட்பு

3 November 2020, 5:53 pm
Quick Share

திருவள்ளூர்: நீச்சல் தெரியாமல் கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உடல் மீட்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் நியூ மாருதி டவுன் பகுதியில் வசிக்கும் இமாம் – ஹசினா தம்பதியரின் 19 வயது மகன் ஷேக் ப்ராஹிம் நேற்று மாலை சுமார் நான்கு மணி அளவில் சத்தியமூர்த்தி நீர் பூண்டி ஏரியில் இருந்து வரும் கிருஷ்ணா நதிநீர் கால்வாயில் தனது இரண்டு நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். மேலும் இவர்கள் மூன்று நபர்களும் பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினரால் அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு இருந்த இடம் அருகே குளித்துக் கொண்டிருக்கும்போது நீச்சல் தெரியாததால் திடீரென ஷேக் இப்ராஹிம் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதனால் பதற்றமடைந்த நண்பர்கள் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், திருவள்ளூர் தீயணைப்பு துறையினர் நிலை அலுவலர் பாலு தலைமையில் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 25 கிலோமீட்டர் தூர கிருஷ்ணா நதிநீர் ஷேக் இப்ராஹிமை பல மணி நேர தேடுதல் பணிக்கு பின்னர் அவரது உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த புல்லரம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். நண்பர்களுடன் குளிக்க சென்று நீச்சல் தெரியாமல் இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 19

0

0