ஓய்வுபெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் திருட்டு: 7 பவுன் மற்றும் 70 ஆயிரம் பணம் கொள்ளை

21 July 2021, 1:56 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே ஓய்வுபெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர் வீட்டில் 7 பவுன் மற்றும்
70 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை நவல்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சோழமாநகர் குலோத்துங்கன் சாலையை சேர்ந்தவர் சூரியகுமார் ஓய்வுபெற்ற துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் திருமணமாகிமுதல் மகள் திருச்சி ஸ்ரீரங்கத்திலும் இரண்டாவது மகள் சென்னையிலும் உள்ளார். கடந்த 8ஆம் தேதி சென்னையில் உள்ள இரண்டாவது மகள் வீட்டிற்கு சூரியகுமார் அவரது மனைவியும் சென்றுள்ளனர். இன்று வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து உடனடியாக சூரியகுமார் நவல்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் விரைந்து வந்த நவல்பட்டு போலீசார் சூரியகுமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை மற்றும் 70 ஆயிரம் பணம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது மோப்பநாய் அச்சாலையில் கடைசி வரை சென்றது. பின்னர் அப்பகுதியில் உள்ள அடர்ந்த காட்டு பகுதிக்கு சென்றது. இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Views: - 103

0

0