நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து திருட்டு

Author: kavin kumar
29 September 2021, 4:27 pm
Quick Share

திருவாரூர்:நன்னிலம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாகோவில் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி பேருந்து திருவாரூர் மாவட்டம்  நன்னிலம் அருகே மணவாளம்பேட்டை பகுதியில் மாலை நிறுத்தி விட்டு காலையில் பேருந்தை எடுத்து மாணவர்களை அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம் போல கல்லூரி பேருந்தை ஓட்டுநர் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலை வந்து பார்த்த போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை காணவில்லை. இதனையடுத்து நன்னிலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுகுணாவிடம் பேருந்து காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் நன்னிலம் காவல்த்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக ரோந்து காவல் துறையினர் மற்றும் சுங்க சாவடிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் திருச்சிக்கும் கரூர்க்கும் இடையே திருப்பாயத்துறை பகுதியில் உள்ள சுங்க சாவடி அருகே பேருந்தை  அங்கு உள்ள ரோந்து காவல்துறையினர்  மடக்கி பிடித்தனர். பேருந்தை ஓட்டி சென்றவர்கள் தப்பி ஓடினர். தப்பியோடிய பேருந்து திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Views: - 180

0

0