நூதன முறையில் ‘பணம்’ திருட்டு; வைரலாக பரவும் சிசிடிவி காட்சி!

Author: Udhayakumar Raman
17 September 2021, 3:33 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் மின் துறை ஊழியர் இரு சக்கர வாகனத்தில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் பணம் திருடி சென்ற மர்ம நபர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலிசார் தேடி வருகின்றனர்

புதுச்சேரி கன்னிகோயில் பகுதியை சேர்ந்தவர் ருத்ர குமார் (58), மின்துறையில் பணியாற்றி வரும் இவர் தனது மகளை கிரும்மாம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் சேர்த்துள்ளார், இந்நிலையில் இந்த கல்வி ஆண்டிற்கான கட்டணத்தை செலுத்துவதற்காக கிருமாம்பாக்கம் காவல் நிலையம் எதிரே உள்ள இந்தியன் வங்கியில் இருந்து 1.5 லட்சம் ரூபாய் பணம் எடுத்து விட்டு அதனை தனது இருசக்கர வாகன பெட்டியில் வைத்து கொண்டு அருகே இருந்த ஜெராக்ஸ் கடையிக்கு சென்றுள்ளார், பின் கடையில் இருந்து வந்து பார்த்த போது தனது வாகன பெட்டியில் இருந்த பணம் காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்,

இந்த திருட்டு சம்பவம் குறித்து கிரும்மாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், அவர் அளித்த புகாரின் பேரில் போலிசார் வழக்கு பதிவு செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர் அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் ருத்ர குமாரை பின் தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள் ருத்ர குமார் கடையின் உள்ளே சென்ற உடன் அவர் வாகனத்தில் இருந்து பணத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது, இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு திருட்டில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்..

Views: - 253

0

0