கண்டெய்னர் லாரியில் இருந்த இருசக்கர உதிரி பாகங்கள் திருட்டு

2 November 2020, 10:37 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே கண்டெய்னர் லாரியின் பூட்டை உடைத்து ரூ.8.5 லட்சம் மதிப்பிலான இருசக்கர உதிரி பாகங்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே செட்டியப்பனூர் என்ற இடத்தில் பெங்களூர் – சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் மத்திய பிரதேச மாநிலம் இந்தோரில் இருந்து சென்னைக்கு ராயல் என்ஃபீல்ட் புல்லட் இருசக்கர வாகன உதிரி பாகங்களை ஏற்றி வந்த லாரி சனிக்கிழமை இரவு ஓட்டுநர் மஹமூத் தூக்கம் காரனமாக சாலை ஓரம் நிறுத்தி விட்டு தூங்கி உள்ளார். இரண்டு நாட்கள் ஓரே இடத்தில் லாரி நின்று கொண்டிருந்த நிலையில் இன்று எழுந்து பார்த்த போது லாரியின் பூட்டு உடைக்கப்பட்டும்,

கதவு திறந்த நிலையில் இருப்பதை கண்டு ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் லாரியில் சோதித்து பார்த்த போது சுமார் ரூ.8.5 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.சம்பவம் குறித்து லாரி ஓட்டுநர் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் இந்நிகழ்வு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 14

0

0