செல்போன் பறிப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது..மற்றொருவர் தலைமறைவு

Author: Udayaraman
6 October 2020, 11:20 pm
Quick Share

சென்னை: வியாசர்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 12ம் தேதி பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து உணவு வாங்கிக் கொண்டு வெளியே வரும்போது இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து இவரது செல்போனை பிடுங்கி சென்றனர். இதுகுறித்து சரவணன் செம்பியம் குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணன் தொலைபேசி எண்ணை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். அதன்பேரில் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்கின்ற பப்லு என்ற நபரை கைது செய்தனர். மேலும் இவரது நண்பரான விக்கி என்ற நபரையும் தேடிவருகின்றனர். இவரிடம் இருந்து சரவணனின் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தோஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 53

0

0