பட்டப்பலிலேயே சைக்கிள் திருட்டில் ஈடுபட திருடர்கள்

9 October 2020, 9:10 pm
Quick Share

புதுச்சேரி: அரியாங்குப்பம் பகுதியில் பட்டப்பலிலேயே சைக்கிள் திருட்டில் ஈடுபட திருடர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவர் அதேபகுதியில் உள்ள அரவிந்தர் வீதியில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவர் தினந்தோரும் அங்கு தனது சைக்கிள் மூலம் வேலைக்கு வருவார். அப்போது தனது சைக்கிளை நிறுவனத்திற்கு எதிரே நிறுத்திவிட்டு சென்றுள்ளார் இந்நிலையில் நேற்று அவரது சைக்கிள் திருடப்பட்டதை அறிந்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டபடி சென்ற இருவர் திரும்ப வந்து அவரது சைக்கிளை லாவகமாக திருடி செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் சைக்கிள் திருடியவர்களை தேடி வருகின்றனர்.

Views: - 29

0

0