தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேர் கைது…
3 August 2020, 7:13 pmதிருவள்ளூர்: கும்மிடிப்பூண்டியில் தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
கும்மிடிப்பூண்டியில் தொடர்ந்து கொலை கொள்ளை வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிப்காட் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். ரோந்து பணியின்போது கும்மிடிபூண்டி விவேகானந்தா நகரில் உள்ள பெட்டி கடையில் பணம் கேட்டு மிரட்டுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரிஸ்க் பாஸ்கர் மற்றும் வினோத் ஆகிய இருவரை கைது செய்தனர்.
மேலும் இவர்களுடன் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட கார்த்திக், மணிமாறன், பாக்யராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், இவர்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நடந்த மூவர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.