துப்புரவு பணியாளர் கழுத்து நெரித்து கொலை

Author: Udayaraman
12 October 2020, 11:14 pm
Quick Share

திருவள்ளூர்: ஆரணி பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்த பெண் மர்மமான முறையில் ஏரிக்கரை அருகே முட்புதரில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் அக்கரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் எல்லையன். இவர் பன்றி மேய்க்கும் தொழிலாளியான இவரது மனைவி கௌரி ஆரணி பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன நிலையில், கண்ணிகை பேர் ஏரி அருகே முட்புதரில் இவரது உடல் கழுத்தை நெறித்து கொல்லப்பட்ட நிலையில், முட்புதரில் இருப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது.

அதன் பேரில் பெரியபாளையம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கௌரியை முன்விரோதம் காரணமாக யாரேனும் கொலை செய்தனரா அல்லது பாலியல் துன்புறுத்தலில் அவரை யாரேனும் கொலை செய்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக்கொலை சம்பவம் தொடர்பாக கௌரியின் கணவர் எல்லயைனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 38

0

0