இருவரை ஓடஓட அரிவாளால் வெட்டிய கும்பல்: சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்

29 September 2020, 10:34 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே முன்விரோதம் காரணமாக இருவரை ஓடஓட அரிவாளால் வெட்டிய வழக்கில் மூன்று பேரை கைது செய்து சிப்காட் போலீசார் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பன்குப்பம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்கிற சேகர், சுரேஷ் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த மர்ம நபர்கள் வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் விழுந்த சேகரை அவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த சுரேஷ் முயன்ற போது அவரையும் சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளனர்.

படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சிப்காட் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சித்தராஜகண்டிகை சேர்ந்த ஞானசேகர், கிருஷ்ணன், கிரண் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.