கள்ளக்காதல் விவகாரத்தில்போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் வெட்டிக்கொலை:கள்ளக்காதலியின் கணவர் உள்ளிட்ட 7 பேர் கைது

26 September 2020, 10:39 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் போட்டோ ஸ்டுடியோ உரிமையாளர் பட்டபகலில் வெட்டிக்
கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலியின் கணவர் உள்ளிட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் காக்கலூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர் காக்களூர் புட்டலூர் செல்லும் சாலையில் போட்டோ ஸ்டுடியோ கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஸ்டூடியோவுக்குள் புகுந்து சரமாரியாக அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா அல்லது கள்ளக்காதல் தொடர்பாக கொலை நடந்து இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட தினேஷ்குமாருக்கும் அவரது மனைவி அனிதா இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், ஏற்கனவே தினேஷ்குமாருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த பிரகாஷ் என்பவரது மனைவி கோட்டீஸ்வரிக்கும கள்ளக் காதல் இருந்து வந்ததாகவும், இதனை பிரகாஷ் எச்சரித்தும் தினேஷ்குமார் கண்டுகொள்ளாததால் ஊரை விட்டு காலி செய்து புதுவண்ணாரப்பேட்டையில் கோட்டீஸ்வரி மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் பிரகாஷ் வசித்து வந்ததாகவும்,

அப்போதும் கள்ளத்தொடர்பை தினேஷ்குமார் விடாததால் பிரகாஷ் தினேஷ்குமார் மனைவி வனிதாவிடம் இதுகுறித்து தெரிவித்தும், கள்ளத்தொடர்பை கைவிடாதால் அவரது மனைவி கோட்டீஸ்வரியை அடித்து உதைத்துள்ளார். பிரகாஷின் மனைவி ராயபுரம் காவல்நிலையத்தில் அளித்த புகாரில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமினில் வெளி வந்த நிலையில் தினேஷ்குமாரை கொல்ல திட்டமிட்டதாகவும்,

தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தினேஷ்குமாரை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான அப்துல் அஜீஸ், ராஜி, கார்த்திக், மகேஷ், சூர்யா, குமார் உள்ளிட்ட ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.