கொற்கை அகழாய்வில் 4 அடுக்கு சுடுமண் குழாய்கள் கண்டுபிடிப்பு!

21 July 2021, 5:31 pm
Quick Share

தூத்துக்குடி: ஏரல் வட்டம் கொற்கையில் நடைபெறும் தமிழக அரசின் தொல்லியல் அகழாய்வில் நான்கு அடுக்கு கொண்ட சுடுமண் வடிகட்டி குழாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் பழம்பெரும் நகரமான கொற்கையில் நடைபெறும் தமிழக அரசின் அகழாய்வில் தொல்லியல் துறையின் சார்பில் பதினேழு குழிகள் தோண்டப்பட்டு தொல்லியல் இயக்குனர் தங்க துரை அவர்களின் தலைமையில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது பழங்கால பானை ஓடுகள் வளையல்கள் பெருமளவில் கிடைத்துள்ளன. தற்போது ஒரு குழியில் திரவப் பொருட்கள் வடிகட்டும் நான்கு அடுக்கு கொண்ட சுடுமண் குழாய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுமேலும் அதேகுழியில் கடல்வாழ் விலங்குகளின் எலும்புகள்மற்றும் கண்ணாடி வளையல்கள் கிடைத்துள்ளன .இதனை தொடர்ந்து ஆய்வாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்

Views: - 48

0

0