100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியில் முறையாக பணி வழங்காததை கண்டித்துபோராட்டத்தில் ஈடுபட்டமக்கள்

Author: Udayaraman
29 July 2021, 5:56 pm
Quick Share

திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே மகாத்மா காந்திதேசிய ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியில் முறையாக பணி வழங்காததை கண்டித்து எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராமமக்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் தாராட்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ்சுமார் 250க்கும் மேற்பட்ட பயனாளிகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மூன்று வார காலமாக 75-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு முறையாக பணிகளை வழங்காமல் பணித்தள பொறுப்பாளரை மாற்றியதாகவும்,ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமியிடம் தாங்கள்பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்,

பெண் ஊராட்சி மன்ற தலைவர் கணவரின் தலையீடு ஊராட்சி நிர்வாகத்தில் உள்ளதை தடுக்க வேண்டும் எனவும், முறையாக தங்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு வாயில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தங்கள்கோரிக்கையை நிறைவேற்றி உரிய முறையில் தங்களுக்கு பணி வழங்காவிட்டால்அடுத்த கட்டமாக சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறுபோராட்டங்களில் ஈடுபடுவோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

Views: - 51

0

0