பஞ்சாபிலிருந்து கோவைக்கு வந்தது ஆயிரம் டன் கோதுமை

6 August 2020, 3:34 pm
Quick Share

கோவை: கோவையில் வினியோகம் செய்யப்படுவதற்காக பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் 1000 டன் கோதுமை கோவை வந்தடைந்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் பயணிகள் ரயில் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் கூட்ஸ் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அத்தியாவசிய பொருட்கள், விவசாய பொருட்கள் கூட்ஸ் ரயில்கள் மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 1000 டன் கோதுமை கூட்ஸ் ரயில் மூலமாக இன்று கோவை வந்தடைந்தது.


அவ்வாறு வந்த கோதுமை மூட்டைகளை வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து 65 லாரிகள் மூலம் பவர் ஹவுஸ் அருகே உள்ள மத்திய உணவு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. இவை கோவை, பொள்ளாச்சி, திருப்பூர் மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்யவும், வியாரிகளுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.