அடியாட்கள் உதவியுடன் டீக்கடை அகற்றி கொலை மிரட்டல்: சோழவரம் காவல் நிலையத்தில் புகார்

23 August 2020, 4:20 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஊரடங்கு அமலில்உள்ள நேரத்தில் டீக்கடை ஜேசிபி இயந்திரம் வைத்து அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவருக்கு சொந்தமான டீகடை மற்றும் உணவகம்
கடந்த 13 ஆண்டுகளாக செயல்படுகிறது என்ற நிலையில் இந்த நிலையில் ஆவடி பகுதியை சேர்ந்த பாரதி என்ற
பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் டீக்கடையை இடித்து தரைமட்டமாக்கியதுடன் சேகருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தலைமையாசிரியர் பாரதி புதிய வணிக வளாக கட்டிடம் கட்டி அப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திறந்ததால் அதற்கு முன்பாக இருந்த டீகடையை இடஞ்சலாக உள்ளதாக கூறி கடையை அகற்றியது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து புகாரின் பேரில் சம்பவம் தொடர்பாக சோழவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு அமலில்உள்ள நேரத்தில் டீக்கடை ஜேசிபி இயந்திரம் வைத்து அகற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 35

0

0