கஞ்சா விற்பனை செய்த மூன்று பேர் கைது: கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்

12 July 2021, 6:59 pm
Quick Share

திருவாரூர்: திருவாரூரில் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் நகர பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருவாரூர் நகர காவல் துறையினர் மற்றும் தனிப்படை பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி தனிப்படை போலீசார் விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்த அழகிரி காலனி பகுதியை சேர்ந்த ராஜா, ஸ்டாலின்,

சிவசங்கர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து முக்கால் கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தல், பதுக்கல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 146

0

0