கத்தியை காட்டி வாலிபரை தாக்கி பணம் பறிப்பில் ஈடுபட்ட 3 பேர் கைது

10 July 2021, 8:53 pm
Quick Share

சென்னை: கொடுங்கையூரில் கத்தியை காட்டி வாலிபரை தாக்கி பணப் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூர் வியாசர்பாடி சுந்தரம் பவர் லைன் பகுதியை சேர்ந்தவர் இளைய மதி. இவர் எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள கேஸ் ஏஜென்சியில் டெலிவரி நபராக வேலை பார்த்து வருகிறார். பணி முடித்து விட்டு , வியாசர்பாடி எம்.கே.பி நகர் 3 வது சாலையில் சென்று கொண்டிருந்த போது 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்பொழுது அவர்கள் கத்தியால் இளமதியை தாக்கி விட்டு கேஸ் டெலிவரி செய்த பணம் 32 ஆயிரத்து பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர். இளைய மதி அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இது குறித்து எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் எம்.கே.பி நகர் உதவி கமிஷனர் சுரேந்தர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் உதவி கமிஷனரின் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கல்வியரசன் தலைமையிலான போலீசார் முல்லை நகர் சுடுகாடு அருகே பதுங்கியிருந்த கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த வினோத், அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்த், வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் கஞ்சா போதையில் இவர்கள் பணம் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.தொடர்ந்து எம்.கே.பி நகர் போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்

Views: - 75

0

0