பெட்ரோல் குண்டு வீசி மூன்று நபர்கள் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிக்க 7 ரவுடிகள் கைது

1 November 2020, 4:28 pm
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் பெட்ரோல் குண்டு வீசி மூன்று நபர்களை கத்தியால் வெட்டி விட்டு தப்பித்த 7 ரவுடிகளை செங்கல்பட்டு நகர காவல் துறையினர் கைது செய்தனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மக்கான் சந்து பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் நண்பர்கள் தனசேகர், சுரேந்தர் ஆகியோருடன், ராட்டிண கிணறு அருகே கஞ்சா புகைத்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு பைக்கில் வந்த சுமார் 10 பேர், கஞ்சா குடித்து கொண்டிருந்தவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், அங்கிருந்த 3 பேரையும், மறைத்து வைத்திருந்த வீச்சரிவாளால், சராமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.

இதில் தனசேகர், சுரேந்தர், விக்னேஷ் ஆகியோருக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவலறிந்து செங்கல்பட்டு டவுன் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கஞ்சா விற்பனை செய்தில் கோஷ்டியினருக்கு ஏற்பட்ட தொழில் போட்டியால் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதில், முன் விரோதம் காரணமாக, எதிர் கோஷ்டியினர், பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

செங்கல்பட்டு நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர் .மேலும் மாவட்ட தனிப்படையினர் தப்பி ஓடி தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பொறி வைத்து பிடித்தனர். அதில் வீரக்குடி வெள்ளாளர் தெருவை சேர்ந்த மனோஜ், தனசேகர், ஜீவா, அந்தோணி, பவர் , ஆகாஷ், பாலமுருகன் ஆகிய 7 பேரை கைது சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருசிலரை செங்கல்பட்டு நகர காவல் துறையினர் தேடி வருகின்றனர் .

Views: - 13

0

0