பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய மூன்று ரவுடிகள் கைது

23 September 2020, 9:27 pm
Quick Share

புதுச்சேரி: எதிரியை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிய மூன்று ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்

புதுச்சேரி முத்தியால்பேட்டை போலீசார் வைத்திக்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவர்கள் புதுச்சேரி வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த அருண்குமார், அருள், புஷ்பராஜ் என்றும் அவர்கள் மீது புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் மறைத்து வைத்து இருந்த 4 நாட்டு வெடிகுண்டுகள், 2 வீச்சு அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் வைத்திகுப்பம் பகுதியை சேர்ந்த தங்களின் எதிரியான குட்டி சிவாவை கொலை செய்வதற்காக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களுடன் வந்ததாக ஒப்பு கொண்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீசார் ரவுடிகளான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Views: - 1

0

0