குமரியில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி மூன்று சக்கர வாகன பிரச்சாரம்…!

Author: Udhayakumar Raman
17 March 2021, 4:16 pm
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குரிமை அவசியம் குறித்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் பிரச்சாரத்தின் வாயிலாக நடைபெற உள்ள கையெழுத்து இயக்கத்தையும் மூன்று சக்கர வாகன பிரச்சாரம் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியரும் , தேர்தல் அலுவலரான அரவிந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆட்சியர் அரவிந்த் இது குறித்து பேசியதாவது;- குமரி மாவட்டத்தில் கிராமப்புற பொதுமக்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எளிதாக பயன்படுத்தி வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்திலுள்ள வாக்குரிமை பெற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்திடும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் வாயிலாக விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து , அர்த்தமுள்ள சுதந்திரத்தை அனுபவிக்க அனைவரும் முகக்கவசம் அணிந்து வாக்களிப்போம் ,ஜனநாயகத்தில் பங்கேற்பும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, திட்ட இயக்குனர் மைக்கல் அந்தோனி பெர்ணாண்டோ, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் மயில் , மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கர் , மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, தேர்தல் வட்டாட்சியர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Views: - 59

0

0