தேர்தல் பணியை துவக்கிய துரைமுருகன்: பல்வேறு செயல்படுகள் குறித்து ஆலோசனை

20 November 2020, 7:11 pm
Quick Share

வேலூர்: காட்பாடி தொகுதியில் திமுக பொதுசெயலாளரும் எதிர்க்கட்சிதுணைதலைவருமான துரைமுருகன் தேர்தல் பணியை துவங்கினார்.

வேலூர் மாவட்டம்,காட்பாடியில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுசெயலாளர் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் தனதுதொகுதியில் தேர்தல் பணிகளை முழு வீச்சில் துவங்கியுள்ளார். இந்த தொகுதிக்குட்பட்ட 300-க்கும் மேற்பட்ட வாக்குசாவடி முகவர்களை அழைத்து அவர்கள் தற்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். இதில் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளை

பொதுமக்களுக்கு திமுகவினர் உதவி செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற செய்ய வேண்டும், போலி வாக்காளர்களின் பெயர்களை நீக்க வேண்டும், வாக்குசாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் எவ்வாறு தேர்தல் நேரத்தில் மக்களை அணுகுவது முன்னதாக கிளை செயலாளர்களுடன் பொதுமக்களை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு திரட்டுவது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது உள்ளிட்டவைகளை வாக்குசாவடி முகவர்களுக்கு எடுத்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் திரளான திமுகவினர் கலந்துகொண்டனர். தேர்தல் பணியை யுக்திகளுடன் தற்போதே இவர் துவங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0