புலி தாக்கி பசு மாடு பலி: புலியை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறை

Author: Udhayakumar Raman
23 September 2021, 7:36 pm
Quick Share

நீலகிரி: கூடலூர் அருகே பசு மாடுகளை அடித்துக் கொன்று வரும் புலியை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது.

கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக கால்நடைகளை தாக்கி கொண்டுவரும் புலியால் மக்கள் மிகுந்த பீதி அடைந்துள்ளனர்.நேற்றைய தினம் சேமுண்டி எனும் பகுதியில் புலி தாக்கி பசுமாடு பலியானது. இதையடுத்து அக்கிராம மக்கள் இறந்த பசுமாட்டு உடலுடன் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.மேலும் புலியை கூண்டு வைத்து பிடிக்கும் வரை போராட்டம் நடத்தப் போவதாக கூறி மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புலியை பிடிக்க கூண்டு வைப்பதாக உறுதி அளித்தனர்.இதையடுத்து என்றும் சேமுண்டி பகுதியில் வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது.

Views: - 48

0

0