தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது

22 September 2020, 6:21 pm
Quick Share

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து விலை உயர்ந்த 3 புல்லட் உட்பட 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில் சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருட்டு போவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருட்டு குறித்து கண்டறிய வாணியம்பாடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையிலான போலீசார் நேதாஜி நகர் பெருமாள்பேட்டை, பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில், வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த மோகன்தாஸ் என்பதும், இவர் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 3 புல்லட்டு உட்பட 5 விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் இது சம்பந்தமாக மோகன்தாஸ் மீது வழக்குப்பதிவு செய்து வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Views: - 0 View

0

0