ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழந்து விபத்து:காயமின்றி தப்பித்த மூவர்…

13 September 2020, 9:38 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சாலை கடக்க முயன்ற மூதாட்டியின் மீது மோதாமல் இருக்க நான்கு சக்கர வாகனத்தை திருப்பிய ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு வேலியின் மீது மோதி தலைக்கீழாக கவிழந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் காயமின்றி தப்பினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற மூதாட்டியின் மீது வேலூரிலிருந்து பெங்களூர் நோக்கிச்சென்ற கார் ஒன்று அதி வேகமாக வந்து கொண்டிருந்த போது சாலையை கடக்க முயன்ற மூதாட்டியின் மீது மோதாமல் இருக்க கார் ஓட்டுநர் காரை திருப்பியுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு வேலிகள் மீது மோதி தலைகீழாக கவிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இரண்டு ஆண்கள் மற்றும் ஓர் பெண் உட்பட மூன்று பேர் காயம் ஏதும்மின்றி உயிர்த்தப்பினர். மேலும் விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் இவ்விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Views: - 0

0

0