மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் புது மாப்பிள்ளை உயிரிழப்பு

26 September 2020, 8:17 pm
Quick Share

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் திம்மசமுத்திரம் கிராம பகுதி மக்களிடையே ptசோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன். இவருக்கும் பழயசீவரம் பகுதியை சேர்ந்த சரளா என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. கண்ணதாசன் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் தொழிற்சாலை பணிக்கு தனது மாமனார் வீட்டில் அளித்த புதிய மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வாலாஜாபாத் தாம்பரம் சாலையில் சென்ற கொண்டிருந்த போது தேவரியம்பக்கம் அருகே மின்னல் வேகத்தில் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கண்ணதாசன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விபத்து நடந்தவுடன் கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் வாலாஜாபாத் போலீசார் விரைந்து சென்று கண்ணதாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்ணதாசனுக்கு திருமணமாகி 35 நாட்கள் தான் ஆனது .அதற்குள் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் திம்மசமுத்திரம் கிராம பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.