ஓய்வு பெற்ற கல்வி திட்ட இயக்குநர் வெட்டி படுகொலை
6 August 2020, 4:45 pmதிருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஓய்வு பெற்ற கல்வி திட்ட இயக்குநர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கிராமிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பேராம்பட்டு பகுதியை சேர்ந்த பரசுராமன் மகன் பாலகிருஷ்ணன் (82)கல்வி திட்ட இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அவரது வீட்டில் மர்மமான முறையில் மிளகாய் பொடி தூவி வெட்டப்பட்ட நிலையில் பாலகிருஷ்ணன் சடலமாக இருப்பதை அறிந்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இவர் எதற்காக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணம் அல்லது சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் தீவிர விசாரணை மேற்கொண்டார். முன்னாள் இயக்குனர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.