கடன் பிரச்சினையால் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை

Author: Udayaraman
29 July 2021, 4:57 pm
Quick Share

திருவாரூர்:திருவாரூரில் கடன் பிரச்சினை காரணமாக அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அடுத்துள்ள நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவருக்கு இந்திரா என்கிற மனைவியும் ஐஸ்வர்யா பேபி ஷாலினி என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர்.முருகானந்தம் நெடுஞ்சேரி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வந்தார் இந்த நிலையில் முருகானந்தம் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பலரிடம் பல லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்ததாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் இன்று நெடுஞ்சேரி பகுதியின் ஆற்றங்கரை ஓரத்தில் முருகானந்தம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் குடவாசல் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்றுள்ளனர். அங்கு முருகானந்தத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் மேலும் பூச்சிமருந்து குடித்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

உடனடியாக குடவாசல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டதில், முருகானந்தம் பல லட்ச ரூபாய் கடன் பிரச்சனையில் இருந்ததாகவும், அதன் காரணமாக பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், உறவினர்கள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். முருகானந்தத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் உள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Views: - 117

0

0