கூட்டுறவு துறைக்கு அதிக முதலீடு வரக் காரணம்.. அமைச்சர் புகழாரம்!!

11 September 2020, 7:39 pm
Ngl Sellu Raju - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : முலதமைச்சர் தலைமையில் செயல்படும் கூட்டுறவு துறை நவீனமாக்கப்பட்டதால் மக்கள் நம்பிக்கையை பெற்று அதன் காரணமாக அதிக முதலீடுகள் வந்துள்ளது என தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவு துறை திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் நடைபெற்றது.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம் வடநேரே மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் 15 ஆயிரத்து 39 பயனாளிகளுக்கு நூற்று ஒன்று (101) கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கப்பட்து.

இதையடுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, கொரோனா காலத்தில் இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் 1000 ரூபாய் பணம் மற்றும் 98 சதவிகித மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கி மக்களை பாதுகாத்தது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்றார்.

முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு தான் கூட்டுறவு துறை நவீனமாக்கியது என்றும், மக்கள் நம்பிக்கையை பெற்று அதன் காரணமாக கூட்டுறவு துறைக்கு அதிக முதலீடுகள் வந்துள்ளது என பேசினார்,

Views: - 8

0

0