கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை.! கணவர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு

7 February 2021, 9:07 pm
Quick Share

கன்னியாகுமரி: கருங்கல் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்த கணவர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்டம் கருங்கல் அடுத்துள்ள விழுந்தயம்பலம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் .இவர் அப்பகுதியில் மரப்பட்டை தொழில் நடத்தி வருகிறார் .இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருநாம செல்விக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதியருக்கு குழந்தை இல்லை. திருநாமசெல்விக்கு திருமணத்தின் போது அவரது பெற்றோர்கள் 31 பவுன் தங்க நகையும் , 5 லட்சம் ரொக்கம் மற்றும் 2 லட்சம் வீட்டு உபயோகப் பொருட்கள் என வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் புதிதாக வீடு கட்டி வரும் ஸ்டீபன் வீடு கட்டுவதற்கு கூடுதலாக பணமும் நகையும் வேண்டும் என்றும் இதை தனது பெற்றோர் வீட்டில் வாங்கி தருமாறு கேட்டு தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளார். நேற்று திருநாமசெல்வி வேலைபார்க்கும் துணிக்கடைக்கு சென்று திருநாம செல்வியை அவதூறாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து திருநாமசொல்லி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு கணவர் ஸ்டீபன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0