ஒகேனக்கல் அருவியில் 7 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

22 October 2020, 11:16 pm
Quick Share

தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று ஒகேனக்கல், இங்குள்ள அருவிகளை காணவும். அருவிகளில் குளிக்கவும் தமிழகம் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் வந்து செல்வது வழக்கம். அதே போல் இங்கு பரிசல் ஓட்டிகள் சமையல் தொழிலாளர்கள்,மசாஜ் தொழிலாளர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் இந்த சுற்றுலா தலத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அதே போல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு மாவட்டம் நிர்வாகம் தடை விதித்தது. இதனால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள பல்வேறு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கடந்த 7 மாதங்களாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே கொரோனா ஊரடங்கு படிப்படியாக குறைக்கப்பட்டதால், தமிழகத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் தருமபுரி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் ஒகேனக்கல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள சுற்றுலா தலத்தை மாவட்ட நிர்வாகம உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று மாவட்ட ஆட்சியர் மலர்விழி ஒகேனக்கல் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் சுற்றுலா பயணிகளை இன்று மாலை முதல் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கபடுவர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 20 ஆயிரம் கன அடிக்கு கீழ் நீர் வரத்து இருந்தால், அருவியில் குளிக்கவும், கோத்திக்கல்லிருந்து மணல் திட்டு வரை பரிசல்கள் இயக்கவும் பரிசல் சவாரி செய்ய 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்,

ஒகேனக்கல்லுக்கு வரும் முன்பு சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகு ஒகேனக்கல்லுக்கு அனுமதிக்கப்படுவர் சுற்றுலா பயணிகளை கண்காணிக்க நான்கு குழுக்கல் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். 7 மாதங்களுக்கு பிறகு ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு மாவட்டம் நிர்வாகம் அனுமதியளித்ததையடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் அங்குள்ள தொழிலாளர்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.

Views: - 32

0

0