ஊசுடு ஏரியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

29 November 2020, 2:47 pm
Quick Share

புதுச்சேரி: தொடர் மழை காரணமாக புதுச்சேரியின் ஊசுடு ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

புதுச்சேரியில் உள்ள மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரியில் கடந்த சில மாதங்களாக நீர் வரத்து குறைத்ததால் வறண்டு காணப்பட்டது. மேலும் ஏரியில் சுற்றுலா பயணிகளுக்கான படகுகளும் இயங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் நிவர் புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக ஊசுடு ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது ஏரி முழு கொள்ளவை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது.

ஊசுடு ஏரி முழுவதும் நிரம்பியுள்ளதை காணவும், ஏரியில் படகு சவாரி செய்யவும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஏரியை பாதுகாத்து அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும் எனவும் பல படகுகள் பழுதடைத்துள்ளதால் அதனை சரிசெய்து அதிகப்படியான படகுகளையும் இயங்க வேண்டும் என்றும் சுற்றுலா வந்தவர்கள் தெரிவித்தனர்.

Views: - 13

0

0