காந்தி மார்கெட் திறக்க கோரி உண்ணாவிதத்தில் ஈடுப்பட்ட வியாபாரிகள் கைது…

2 September 2020, 3:34 pm
Quick Share

திருச்சி: திருச்சி காந்தி மார்கெட் திறக்க கோரி உண்ணாவிதத்தில் ஈடுப்பட்ட வியாபாரிகளை போலீசார் கைது செய்து திருமண்டபத்தில் அடைத்தனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நோய் பாதிப்பை அடுத்து தமிழகம் முழுவதும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான காய்கறி சந்தைகள், மால்கள், வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள காந்தி சந்தையானது இழுத்து மூடப்பட்டது இந்த காந்தி சந்தையில் திருச்சி பல்வேறு பகுதியிலிருந்து சுமார் நாளொன்றுக்கு 10ஆயிரத்துக்கு மேற்பட்ட வியாபாரிகள், விவசாயிகள் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு காய்கறி கொண்டு செல்லப்படுகிறது.


மேலும் கர்நாடக, அந்திரா மற்றும் தமிழகத்தில் நீலகிரி, திண்டுக்கல், கொடைக்கானல், தேனி, உள்ளிட்ட
பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்சி காந்தி சந்தைக்கு லாரிகள் மூலமாக காய்கறி கொண்டு வரப்படும். இந்நிலையில் பொதுமக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் என்பதால் காந்தி சந்தை மூடப்பட்டது. பின்னர் காந்தி சந்தையானது திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதிக்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதையடுத்து சென்னையில் செயல்படும் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வரும் 27ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனவே, திருச்சி காந்தி சந்தையை வரும் 27ஆம் தேதி திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று காந்தி மார்க்கெட் வியாபாரி எஸ்.கே.டி.பாண்டியன் தலைமையில் வியாபாரிகள் காந்தி சந்தை வாசலில் 30க்கு மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதை அறிந்த போலீசார் அவர்களை கைது செய்து திருமண்டபத்தில் அடைத்தனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த காந்தி மார்க்கெட் வியாபாரி சங்க தலைவர்.கமலக்கண்ணன் பேசுகையில், திருச்சி காந்தி திறப்பது குறித்து பலமுறை திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பேச்சு நடத்தப்பட்டது.

அவர் கோயம்பேடு சந்தை திறக்கும் பொழுது திருச்சி காந்தி திறக்கப்படும் என கூறினார். இது வரைக்கும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய காந்தி மார்கெட் வியாபாரி என்.டி.கே.பாண்டியன் கூறுகையில், கடை திறந்து மராமத்து பணிகள் செய்ய தாக்க வேண்டும், பலமுறை மாவட்ட ஆட்சியர் கோயம்பேடு சந்தை திறக்கப்படும்போது திறக்கப்படும் கூறினார். ஆனால் எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

Views: - 7

0

0