தூத்துக்குடி-மதுரை வரையிலான ரயில்கள் 4 நாட்களில் இயக்க தயார்:ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பேட்டி

Author: kavin kumar
14 August 2021, 6:29 pm
Quick Share

தூத்துக்குடி: தூத்துக்குடி-மதுரை வரையிலான புதிய இரட்டை ரயில் வழிதடத்தில் மீளவிட்டான் ரயில்நிலையம் வரை இன்னும் 4 நாட்களில் ரயில்கள் இயக்க தயார் என ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் கூறினார்.

மதுரையிலிருந்து தூத்துக்குடி வரை 160 கிலோ மீட்டருக்கு 11 ஆயிரத்து 822 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக இரட்டை வழிபாதை அமைக்கும் பணி கடந்த இரண்டாண்டுக்கு முன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த தடத்தில் கடம்பூரிலிருந்து வாஞ்சி மணியாச்சி தட்டாப்பாறை வரை முடிவுற்றுள்ள பணிகளில் பாதுகாப்பு அம்சங்களை  ஏற்கனவே  இன்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இன்று தட்டாபாறை முதல் மீளவிட்டான் ரயில் நிலையம் வரை 7 புள்ளி 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் வழி தடத்தை ஆய்வு செய்தார்.

இந்த ரயில் பாதையில் நான்கு சிறிய பாலங்கள், மீளவிட்டான் அருகில் உள்ள ஒரு பெரிய ரயில் மேம்பாலம்,  இடது பக்க வளைவு ரயில் பாதை, மின்சார வயர் கிராசிங், மின்மயமாக்கல் பணிகள், ரயில் பாதை இணைப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். இருப்புப்பாதை பொருத்தப்பட்டுள்ள பணிகள் கட்டிட பணிகள் மின்சார பணிகள் ஒவ்வொன்றையும் அவர் முழுமையாக ஆய்வு செய்தார். ஆங்காங்கே உள்ள சிறு சிறு குறைபாடுகளை சுட்டிக் காட்டிய அவர் அவற்றை சரி செய்ய உத்தரவிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;- இந்த வழித்தடத்தில் பணிகள் இன்னும் மூன்று நான்கு தினங்களில் முழுமை அடையும். அதன் பின்னர் பாதுகாப்பு ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறினார். அதன் பின்னர் இந்த வழித்தடத்தில் மீளவிட்டான் வரை ரயில்கள் இயக்கப்படும் என்று கூறினார்.  மதுரை -தூத்துக்குடி வரையிலான இந்த பணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடையும் என எதிர்பார்க்கபடுகிறது. அவருடன் கோட்ட ரயில்வே மேலாளர் பி.ஆனந்த், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட இயக்குநர் கமலாகர ரெட்டி, கட்டுமான முதன்மை பொறியாளர் தவமணி பாண்டி ஆகியோர் ஆய்வில் பங்கேற்றனர்.

Views: - 153

0

0