சமயபுரம் பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவல்: இன்று முதல் அக்டோபர் 5 வரை தடை செய்யப்பட்ட பகுதியாக ஆட்சியர் அறிவிப்பு

28 September 2020, 2:32 pm
Quick Share

திருச்சி: சமயபுரம் பேரூராட்சி பகுதியில் கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை தடை செய்யப்பட்ட பகுதியாக மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்ததனைத் தொடர்ந்து இன்று முதல் அனைத்து கடைகள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் அனைத்தும் பூட்டிய நிலையில் இருந்தது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் க. சிவராசு , சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சி பகுதியை கொரோனா வைரஸ் நோய் தொற்று கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்ததனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் முருகேசன் தலைமையில் சமயபுரம் காவல் ஆய்வாளர் அழகேந்திரன் , ச. கண்ணனூர் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி ஆகியோர் முன்னிலையில் பேரூராட்சி பகுதியில் உள்ள வியபாரிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் வியபாரிகள் பொது மக்களுடன் கடந்த 25 ம் தேதி கலந்தாய்வு கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.


இக் கூட்டத்தில் பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடை உரிமையாளர்கள் மற்றும் கடையில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரிசோதனை செய்து கொள்ளவும், எதிர்வரும் 28.09.2020 முதல் ஏழு நாட்களுக்கு அனைத்து கடைகளையும் திறக்க வேண்டாம் எனவும் மண்ணச்சநல்லூர் வட்டாட்சியரால் தெரிவிக்கப்பட்டது. எனவே பொது மக்கள் மற்றும் கடை வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் அவர்களது பணியாளர்கள் அனைவரும் கடைவீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெறும் பரிசோதனை முகாமில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ளவேண்டுமெனவும்,

பொது மக்கள் அவசிய பணிக்காக வீட்டை விட்டு வெளியே வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இன்று முதல் அனைத்து கடைகள் மற்றும் உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகளை அதன் உரிமையாளர்கள் பூட்டினர். இந்த நிலை வரும் அக்டோபர் 5 ம் தேதி வரை நடைமுறையில் இருக்குமெனவும் இப் பகுதியில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருவதாகவும் பேருராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி தெரிவித்தார்.

Views: - 7

0

0