பால் கம்பெனியில் பதவி உயர்வு என்ற பெயரில் வடமாநிலங்களுக்கு பணயிடமாற்றம் : இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் ஆர்ப்பாட்டம்

Author: Udhayakumar Raman
18 October 2021, 5:56 pm
Quick Share

தருமபுரி: ஹட்சன் மற்றும் ஆரோக்கியா பால் கம்பெனியில் ஊழியர்களுக்கு பதவி உயர்வு என்ற பெயரில் வடமாநிலங்களுக்கு பணயிடமாற்றம் செய்யும் நிர்வாகத்தை கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கொலசனஹள்ளி பகுதியில் இயங்கிவரும் ஹட்சன் மற்றும் ஆரோக்கியா பால் கம்பெனியில் பனிபுரியும் தொழிலாளர்கள் புதிதாக துவங்கப்பட்ட சிஐடியு தொழிற்சங்கத்தில் இணைந்துள்ளனர். இந்த பால் கம்பெனியில் பணிபுரியும் தொழிலாளர்கள் சிஐடியு சங்கத்தில் இணைந்ததால் அவர்களுக்கு மும்பை, மகாராஸ்ட்ரா, கொல்கத்தா போன்ற வடமாநிலங்களுக்கு 100 பணியாளர்களுக்கு பதிவி உயர்வு என்ற பெயரில் நிர்வாகம் இடமாற்றம் செய்துள்ளது. சுமார் 1000 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிலாளர்களை பணியிடம் மாறுதல் செய்த நிர்வாகத்தை கண்டித்தும், தொழிலாளர் துறையின் உத்தரவை ஏற்க மறுக்கும் ஹட்சன் மற்றும் ஆரோக்கியா பால் கம்பெனி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், தொழிற்சாலையில் தொழிலாளர்கள் நலச் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் தர்ணா போராட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு கோஷங்களிட்டனர்.

Views: - 147

0

0