திருவாரூரிலிருந்து கமலாலய புனிதநீர் அரசலாறு மணல் அயோத்திக்கு அனுப்பி வைப்பு…

1 August 2020, 3:04 pm
Quick Share

திருவாரூர்: ராமர் கோயில் கட்டுவதற்காக திருவாரூரிலிருந்து கமலாலய புனிதநீர் அரசலாறு மணல் அயோத்திக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது

ஆகஸ்ட் 5-ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் இந்து அமைப்பினர் முக்கியமான ஸ்தலங்களின் நீர் மற்றும் காவிரி ஆற்றின் மணல் ஆகியவற்றை பூஜை செய்து அயோத்திக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூரில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலயக் குளத்தின் படித்துறையில் கமலாலய குளத்தின் புனித நீர் மற்றும் அரசலாற்றின் மணல் ஆகியவற்றை வைத்து பூஜை செய்தனர். பின்னர் நீரையும் மணலையும் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக தியாகராஜர் கோவிலுக்குச் சென்று கோவிலின் வாசலில் வைத்து வழிபட்டனர். பின்னர் சிறப்பு பூஜை செய்த புனித நீரையும், மணலையும், விரைவு அஞ்சல் மூலமாக அயோத்திக்கு விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர் அனுப்பி வைத்தனர்.