ரோந்து சென்ற காவலர் மீது தாக்குதல் நடத்திய விவகாரம்… காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்…

6 August 2020, 6:46 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே ரோந்து சென்ற காவலரை மதுபோதையில் இருந்த 2 பேர் தாக்கியதாக கைது அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்காததால் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாரதி நகர் பகுதியில் சாலையோரம் மது அருந்தி கொண்டிருந்ததை அவ்வழியாக ரோந்து சென்ற காவலர் அருண் அவர்கள் சாலையோரம் மது அருந்தக் கூடாது என்று கண்டித்ததால் ஆத்திரமடைந்த 2 பேர் திருமலை குப்பம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் மாதனூர் எம்.எம்.நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகிய இருவரும் காவலர் அருண் தாக்கியுள்ளனர். இந்நிலை அங்கிருந்த பொதுமக்கள் ஆம்பூர் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தன் அவர்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்து 2 இளைஞர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் அவர்கள் மீது அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும், கொலைமிரட்டல் விடுத்ததாகவும், குடிபோதையில் இருந்ததாகவும், தாக்கியதாகவும் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆம்பூர் கிராமிய போலீசார் சிறையில் அடைத்தனர் இந்நிலையில் இச்சம்பவத்தை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காத காவலர் அருண் அவர்களை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Views: - 6

0

0