20 சதவீதகித போனஸ் தொகை வழங்க வழங்கக் கோரி போக்குவரத்து பணிமனை தொழிலாளர்கள் போராட்டம்

9 November 2020, 7:10 pm
Quick Share

விருதுநகர்: தீபாவளிக்கு 10 சதவீத போனஸ் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்கக் கோரி போக்குவரத்து பணிமனை தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் பணிமனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் பணிமனை கேட்டை அதிகாரிகள் பூட்டியதால் பரபரப்பு.

விருதுநகர் போக்குவரத்து அரசு போக்குவரத்து மனை அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசு தங்களுக்கு தீபாவளி போனசாக வழங்கிய 10 சதவீதம் தொகை போதாது என்றும் மேலும் அந்த போனஸ் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்கக் கோரியும் இன்று 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இதனை பார்த்த அதிகாரிகள் போக்குவரத்து பணிமனை முன்பு உள்ள கேட்டை மூடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உள்ளே வர விடாமல் தடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து தொழிலாளர்கள் கேட்டைத் தள்ளி உள்ளே நுழைய முயன்ற போது மாவட்ட காவல்ததுணை கண்காணிப்பாளர் குத்தாலம் தலைமையில் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Views: - 12

0

0