பிரணாப் முகர்ஜி மற்றும் எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு அனைத்து கட்சியின் சார்பில் அஞ்சலி

5 September 2020, 3:54 pm
Quick Share

ஈரோடு: மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் எம்.பி வசந்தகுமார் அவர்களின் படம் திறந்து அனைத்து கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் அவர்களின் அஞ்சலி செலுத்தும் விதமாக ஈரோடு மாவட்டம் மணல்மேடு பகுதியில் உள்ள தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்ட படங்களை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி , பாராளுமன்ற உறுப்பினர் கனேஷமூர்த்தி மற்றும் திமுக துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Views: - 5

0

0