திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணியிடம் ரு 1.39 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

7 November 2020, 4:26 pm
Quick Share

திருச்சி: திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணியிடம் கடத்திவரப்பட்ட 1.39 கோடி மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விருத்தாசலத்தைச் சேர்ந்த சம்சுதீன் (32)என்பவரின் சந்தேகமடைந்த அதிகாரிகள்
அவரது உடமைகளை சோதனை மேற்கொண்ட போது ஏராளமான தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவரது உடமைகளை தீவிர சோதனை செய்த போது அவர் கடத்தி வந்த 2.6 கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்த நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்த தங்கத்தின் மதிப்பு சர்வதேச அளவில் 1 கோடியே 39 லட்சம் என கூறப்படுகிறது.

Views: - 15

0

0