லாரி பின்புறம் கார் மோதிய விபத்து… பெண் உட்பட 2 பேர் பலி…

11 August 2020, 10:55 pm
Quick Share

திருச்சி: திருச்சி அருகே லாரி பின்புறம் கார் மோதிய விபத்தில் சென்னையை சேர்ந்த பெண் உட்பட 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் திருநாமபெருமாள் (52) இவர் தனது மனைவி விஜயலட்சுமி (45) மகன் விக்னேஷ் (22) ஆகியோருடன் நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்வுக்காக காரில் சென்று கொண்டிருந்தனர். காரை ராயபுரத்தை சேர்ந்த சிவா (34) என்பவர் ஒட்டி சென்றார். திருச்சி அடுத்துள்ள சமயபுரம் நெ1டோல்கேட் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியின் ஒட்டுனர், பின்னால் வரும் காரை கவனிக்காமல் வலது திருப்பினர்.

இதன சற்றும் எதிர்பாராத கார் டிரைவர் சிவா தனது காரை நிறுத்த முயற்சித்தார், ஆனால் கார் லாரியின் பின் பக்கம் வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜலெட்சுமி பரிதாபமாக பலியானார். கார் மோதிய விபத்தில் டிப்பர் லாரி தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. தகவலறிந்த கொள்ளிடம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் சிக்கிய கார் ஓட்டுனர் சிவா, திருநாமபெருமாள், விக்னேஷ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே கார் ஓட்டுனர் சிவா உயிரிழந்தார். திருநாமபெருமாள், விக்னேஷ் ஆகியோருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், போலீசார் விபத்தில் பலியான விஜயலட்சுமி, டிரைவர் சிவா ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காத ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மானமதுரையை சேர்ந்த லாரி டிரைவர் செல்லதுரையை(35) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ லாரி முழுவதும் பரவாமல் தண்ணீர் அடித்து கட்டுப்படுத்தினர்.