கனரக வாகனங்களுக்கு மட்டும் ரூ. 5 கட்டணம் உயர்வு: சுங்கச்சாவடி அதிகாரிகள் தகவல்…

1 September 2020, 3:37 pm
Quick Share

திருச்சி: சமயபுரம் சுங்கச்சாவடியில் கனரக வாகனங்களுக்கு மட்டும் ரூ. 5 கட்டணம் உயர்தப்பட்டுள்ளதாகவும், மற்ற வாகனங்களுக்கு பழைய கட்டணமே தொடரும் என சுங்கச்சாவடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங் கச்சாவடியில் கனரக வாகனங்களுக்கு மட்டும் ரூ. 5 கட்டணம் உயர்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 565 சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 48 சுங்கச்சாவடிகள் உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் திருத்தி அமைக்கப்படுவது வழக்கம். ஒரு பகுதி ஏப்ரல் 1 ந்தேதி முதலும் மற்றொரு பகுதி செப்டம்பர் 1 ந்தேதி முதலும் கட்டணம் உயர்த்தப்படும்.

அதன்படி கடந்த ஏப்ரல் 1 ந்தேதி தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்தப்பட்டது.கொரோனாவில் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் கட்டண உயர்வு சில நாட்களுக்கு பிறகு நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. வாகனங்களுக்கு ஏற்றவாறு ரூ 5 முதல் ரூ15 வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடியில் 10 சக்கரங்களுக்கு மேல் உள்ள கனரக வாகனங்களுக்கு மட்டும் ரூ.5 கட்டணம் உயர்த்தப்பட்டது.

மற்ற வாகனங்களுக்கு பழைய கட்டணமே தொடரும் என சுங்கச்சாவடி அதிகாரிகள் தகவலை தெரிவித்தனர். இது குறித்து லாரி ஓட்டுநர் கூறியதாவது:- இந்த கொரோனா காலத்திலும் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். எங்களுக்கான ஊதியம் உயர்த்தப்படவில்லை. மேலும் சுங்க கட்டணத்தை உயர்துகிறார்களே தவிர சாலை பராமரிப்பு, கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

Views: - 0

0

0