வாட்சப் மூலம் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது

4 November 2020, 10:08 pm
Quick Share

திருச்சி: சமயபுரம் பகுதியில் வாட்சப் மூலம் லாட்டரி விற்பனை செய்த 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் வாட்சப் முலமாக லாட்டரி சீட்டு வியாபாரம் நடைபெறுவதாக மாவட்ட காவல் துறை கண்கானிப்பாளருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் தனிப்படை டிஎஸ்பி. பால்சுதர் மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் சமயபுரம் பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர்.

அப்போது அங்கு உள்ள ஒரு பூக்கடையில் சமயபுரம், சக்திநகர் பகுதியை சேர்ந்த சேகர், மற்றும் வெள்ளாளர் தெருவை சேர்ந்த வாசு ஆகிய இரண்டு லாட்டரி வியாபாரிகளைக் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து லாட்டரி குறித்த விபரங்களைத் தெரிவிக்க பயன்படுத்திய 2 ஆண்ட்ராய்டு செல்போன்கள், ரூ.720 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Views: - 20

0

0